உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கருப்பராயர் கோவிலில் மகா கும்பாபிேஷகம்

கருப்பராயர் கோவிலில் மகா கும்பாபிேஷகம்

ஆனைமலை,; ஆனைமலை அருகே, வீரல்பட்டியில் கன்னிமார், விநாயகர், முருகர், கருப்பராயர் சுவாமி கோவில் கும்பாபிேஷக விழா, கடந்த, 17ம் தேதி திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது.முதல் கால வேள்வி, வேள்வி நிறைவு, மூலத்திருமேனிகளுக்கு எண்வகை மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றன. நேற்றுமுன்தினம் காலை இரண்டாம் கால வேள்வி, வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு, வேள்விச்சாலையில் இருந்து திருக்குடங்கள் புறப்பாடு, விமான கலசங்களுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, விநாயகர், கன்னிமார், முருகர், கருப்பராயர் தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. அதன்பின், திருமஞ்சன அலங்காரம், பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி