உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கருப்பராயன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

கருப்பராயன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

நெகமம்; நெகமம், காட்டம்பட்டி அருகில் உள்ள, அரசூர் கருப்பராயன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழாவுக்கு, கடந்த 11ம் தேதி, ஜக்கார்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் இருந்து யானை மேல் தீர்த்த குடங்கள், முளைப்பாரி எடுத்து வரப்பட்டது. கடந்த, 12ம் தேதி, காலை, மங்கள விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, கோபுர விமானம் நிறுவுதல், அங்குரார்ப்பணம், ரக்சாபந்தனம், யாகசாலை பிரவேசம், வேதிகா அர்ச்சனை உள்ளிட்டவைகள் நடந்தது. 13ம் தேதி, மகாலட்சுமி பூஜை, கருவறையில் தீபம் ஏற்றுதல், நாடிசந்தானம், தீபாராதனை, அனைத்து மூர்த்திகளுக்கும் எந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. நேற்று முன்தினம், 14ம் தேதி, அனைத்து விக்கிரகங்களுக்கும் ரக்சா பந்தனம், யாத்ராதானம், கடம் புறப்பாடு, அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சுவாமிக்கு அபிஷேகம், தசதானம், கோ பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை