உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மஹா பெரியவா ஆராதனை விழா

மஹா பெரியவா ஆராதனை விழா

தொண்டாமுத்தூர்; சாம வேத பாராயண டிரஸ்ட் சார்பில், காஞ்சி மஹா பெரியவா 30ம் ஆண்டு ஆராதனை விழா, பேரூர் ஸ்ரீ மஹா பெரியவா மணிமண்டபத்தில் நேற்று நடந்தது.நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை சங்கல்பம், கோ பூஜை கணபதி ஹோமம் நடந்தது. காலை 8:00 மணிக்கு, ருத்ரஹோமம், வஸோத்தாரையும், அதனைத் தொடர்ந்து மஹா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பகல், 12:00 மணிக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பின், சதுர்வேத பாராயணம், தீபாராதனை, ஸ்ரீ ஏக்நாத் பஜன் மண்டலி குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. இரவு, 8:30 மணிக்கு, மங்கள ஆரத்தி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ