முன்னாள் அமைச்சர் குறித்து சுவரொட்டி ஒட்டியவர் கைது
போத்தனுார்; கோவை, குனியமுத்துார், கோவைபுதுார் சுற்றுப்பகுதிகளில் முன்னாள் அமைச்சர் வேலுமணியை தீவிரவாதி என குறிப்பிட்டு, அவரது படத்துடன் சுவரொட்டி ஒட்டப்பட்டது. குனியமுத்துார் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாலக்காடு சாலையில், விஜயலட்சுமி மில் காம்பவுண்டு சுவரில் மீண்டும் சுவரொட்டி ஒட்டப்பட்டது. எஸ்.ஐ., வீரபாவ்நந்தம் அப்பகுதியிலுள்ள சிசிடிவி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.அதிலிருந்த சுகுணாபுரம் கிழக்கு, வினாயகர் கோவில் வீதியை சேர்ந்த விஜயன் 59 என்பவரை கைது செய்தார். எஸ்.ஐ.,புகாரில் வழக்கு பதிவு செய்த போலீசார், விஜயனை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் அவரை ஜாமினில் விடுவித்தார்.