உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வடமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தியவர் கைது

வடமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தியவர் கைது

கோவை, மே 5-விற்பனைக்காக வடமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.ரயில்கள் வாயிலாக வடமாநிலங்களில் இருந்து, கோவை மற்றும் கேரளாவுக்கு கஞ்சா கடத்தல் அதிகளவு நடந்து வந்தது. இதைத்தடுக்க ரயில்வே பாதுகாப்பு படையினர், போலீசார், மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கோல்கட்டா, சந்திரகாச்சியில் இருந்து மங்களூர் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில், கஞ்சா கடத்தி வரப்படுவதாக, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, கோவை ரயில்வே ஸ்டேஷன் சென்ற போலீசார், அதிகாலை 3:05 மணிக்கு முதல் நடைமேடை வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளை, தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது முன்பதிவில்லாத பெட்டியில் இருந்து, இறங்கிய ஒருவரின் உடமைகளை சோதித்தனர். அவரது பையில் கஞ்சா மறைத்து வைத்திருந்தார்.அவரை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கேரள மாநிலம், மலப்புரம் திரூரங்காடியை சேர்ந்த முகமது பாஹிஸ், 22 என்பதும், விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. அவரை சிறையில் அடைத்த போலீசார் அவரிடமிருந்து, இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி