எலக்ட்ரிக் பொருட்கள் திருடியவர் கைது
பெ.நா.பாளையம்; பன்னிமடை பாரி நகரில் லாரன்ஸ் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், புதிய வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ஓயர் மற்றும் எலக்ட்ரிக் பொருட்களை திருடினார்.அப்போது அங்கு வேலை செய்து கொண்டு இருந்த நபர்கள், அவரை பிடித்து தடாகம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கோவையை சேர்ந்த ராஜேஷ்குமார், 42, என, தெரிந்தது. விசாரணையில் இவர் மீது ஏற்கனவே பீளமேடு, சரவணம்பட்டி, மதுக்கரை உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு வழக்கு இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ராஜேஷ்குமார், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.