உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் பகுதியில், இளம்பெண் குளிப்பதை, மொபைல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தொண்டாமுத்தூர் சுற்றுப்பகுதியை சேர்ந்தவர், 22 வயது இளம்பெண். இவர் நேற்று அதிகாலை, வீட்டில் உள்ள குளியலறையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது, குளியலறை ஜன்னலில் வெளிச்சம் அடித்துள்ளது. அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்டுள்ளார். பெண்ணின் தந்தை, வீட்டின் வெளியே சென்று பார்த்த போது, அங்கிருந்து தப்ப முயன்ற வாலிபரை பிடித்தார்.அவரது மொபைல்போனை சோதனை செய்த போது, அதில், இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்திருந்தது தெரியவந்தது. அருகில் உள்ளவர்களின் உதவியுடன், அந்த வாலிபரை பிடித்து தொண்டாமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த வாலிபர், கலிக்கநாயக்கன்பாளையம், ஜே.ஜே. நகரை சேர்ந்த கார்த்திக்ராஜ் என்பது தெரியவந்தது. இளம் பெண்ணின் புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார்த்திக்ராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை