உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரிவாளை காட்டி மிரட்டியவர் குண்டர் சட்டத்தில் கைது

அரிவாளை காட்டி மிரட்டியவர் குண்டர் சட்டத்தில் கைது

அன்னுார்; பொது இடத்தில் அரிவாளை காட்டி மிரட்டி, தகராறு செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சின்னவேடம்பட்டியை சேர்ந்த அன்பு மகன் அஜித் வீரன், 25. இவர் மீது வழிப்பறி வழக்கு உள்ளது. இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு, அன்னுாரில் பஸ் ஸ்டாண்ட் அருகே அரிவாளை காட்டி மிரட்டி தகராறு செய்துள்ளார். அன்னுார் போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாலும், தொடர் குற்றங்களில் ஈடுபடுவதாலும், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கோவை கலெக்டர் பவன் குமார் அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதற்கான உத்தரவு, கோவை மத்திய சிறையில் உள்ள அஜித் வீரனிடம் தரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை