உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயிலில் மெத்தபெட்டமைன் கடத்திய நபருக்கு சிறை

ரயிலில் மெத்தபெட்டமைன் கடத்திய நபருக்கு சிறை

கோவை; ரயிலில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தி வந்த நபரை, ரயில்வே போலீசார் சிறையில் அடைத்தனர்.நேற்று முன் தினம் இரவு, கோவை ரயில்வே ஸ்டேஷனில் பகுதியில், மதுவிலக்கு அமலாக்கத் துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சந்தேகத்துக்கு இடமான வகையில், வெளியே வந்த கொண்டிருந்த நபரை பிடித்தனர். அவரிடம் நடத்திய சோதனையில், 150 கிராம் மெத்தபெட்டமைனை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. விசாரணையில், அவர் கேரள மாநிலம் ஆலப்புழா, காயம்குளத்தை சேர்ந்த முகமது சினான், 19 எனத் தெரிந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, கேரளாவுக்கு மெத்தபெட்டமைன் கடத்தியது தெரிந்தது. அவரை சிறையில் அடைத்த போலீசார், அவரிடமிருந்து மெத்தபெட்டமைன் மற்றும் 115 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி