உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு சிறை

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு சிறை

சூலுார்: சுல்தான்பேட்டை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரிபுத்தூரை சேர்ந்தவர் ஸ்ரீலா தேவி, 35. இவர் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி தங்கராஜூக்கு சொந்தமான வீட்டை, கடந்தாண்டு விலைக்கு வாங்கி குடியிருந்து வருகிறார். இந்நிலையில், ஸ்ரீலா தேவி வீட்டுக்கு, மதுபோதையில் அடிக்கடி சென்று, தங்கராஜ் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அங்கு சென்ற தங்கராஜ், தம்பதியை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆத்திரமடைந்த அவர், பாட்டிலை எடுத்து ஜன்னல் கண்ணாடியை உடைத்து, பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அப்பெண் கொடுத்த புகாரின்படி, சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, தங்கராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை