மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்...
24-Aug-2025
கோவை; போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு, பிணையில் வந்த நபர் துாக்கிட்டு மரணம் அடைந்த நிலையில் காணப்பட்டார். கோவை சங்கனுார் காந்தி நகரை சேர்ந்தவர் மொட்டையன், 52. கடந்த மார்ச் மாதம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஜூலை மாதம், நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். வெளியில் வந்த அவர், மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டில், மின்விசிறியில் துாக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
24-Aug-2025