மேலும் செய்திகள்
பைக் திருடியவர் கைது
26-May-2025
கோவை; தொழில் போட்டியில் ஏற்பட்ட தகராறில், இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ், 38; கோவையில் தங்கியிருந்து 'டைல்ஸ்' ஒட்டும் பணி செய்து வருகிறார். அவரிடம் ராஜஸ்தானை சேர்ந்த ரோகித்தும், 22 அவரது சகோதரரும் பணியாற்றி வந்தனர். பின்னர், இருவரும் பிரிந்து சென்று, தனியாக 'டைல்ஸ்' ஒட்டும் பணி செய்து வந்தனர். இதனால் இருவருக்கும் இடையே, தொழில் போட்டி இருந்து வந்தது.கடந்த, 22ம் தேதி ரோகித்தின் சகோதரர் ஜெகதீசிடம், மொபைலில் அழைத்து பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரோகித், ஜெகதீசை அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டினார். ஜெகதீஷ் தங்கியிருக்கும் வீட்டுக்கு சென்று, அவரது இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்தார். பின், அருகில் இருந்த வேறொருவரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து தப்பி சென்றார்.சம்பவம் குறித்து ஜெகதீஷ், துடியலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோகித்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
26-May-2025