உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சடலம் எரிக்கும் தொழிலாளியைதாக்கிய நபருக்கு 6 ஆண்டுசிறை

சடலம் எரிக்கும் தொழிலாளியைதாக்கிய நபருக்கு 6 ஆண்டுசிறை

கோவை: சடலம் எரிக்கும் தொழிலாளியை தாக்கியவருக்கு, ஆறாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கோவை,ஆத்துப்பாலம், அணை மேடு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி,34. அதே பகுதியிலுள்ள மின்மயானத்தில் சடலம் எரிக்கும் எந்திர ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். பட்டியலினத்தை சேர்ந்த இவருக்கும், ஆத்துபபாலத்தை சேர்ந்த பைசல்ரகுமான்,33, என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2016, டிச.,11ல், பாலாஜி நடந்து சென்ற போது, பைசல் ரகுமான் மற்றும் மன்சூர், நிசாருதீன், அப்சல், முஜி உள்ளிட்ட எட்டு பேர் சேர்ந்து உருட்டு கட்டையால் தாக்கினர்.புகாரின் பேரில், குனியமுத்துார் போலீசார் விசாரித்து, பைசல் ரகுமான் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து, கோவையிலுள்ள எஸ்.சி.,- எஸ்.டி., வன்கொடுமை வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்டவர்களில் பைசல் ரகுமானுக்கு, ஆயுதத்தால் தாக்குதல் சட்டப்பிரிவின் கீழ் , 3 ஆண்டுசிறை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை, 10,500 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதால், மொத்தம் ஆறு ஆண்டு சிறையில் அடைக்கப்படுவார்.மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் பாலசுப்பிரமணியன் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி