உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மேலாண்மை துறை அணிகள்

சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மேலாண்மை துறை அணிகள்

கோவை; கற்பகம் பல்கலையில் நடந்த விளையாட்டு விழாவில், இன்ஜி., மற்றும் மேலாண்மை துறை அணிகள் 'சாம்பியன்ஷிப்' பட்டம் வென்றன.கற்பகம் நிகர்நிலை பல்கலையில் விளையாட்டு விழா நடந்தது. கோவைப்புதுார் நான்காவது பெட்டாலியன் கமாண்டன்ட் செந்தில்குமார், போட்டிகளை துவங்கி வைத்தார். இன்ஜி., ஆர்க்கிடெக்சர், பார்மஸி அணிகள் இடையேயான ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில், இன்ஜி., அணி, 160 புள்ளிகளுடனும், கலை அறிவியல், மேலாண்மை துறை இடையேயான போட்டிகளில் மேலாண்மை துறை, 145 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது.வெற்றி பெற்றவர்களுக்கு, பல்கலை துணைவேந்தர் வெங்கடாஜலபதி, பதிவாளர் ரவி, உடற்கல்வி இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர், பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை