உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்!

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்!

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் மாம்பழ சீசன் நிலவும். இந்த காலத்தில் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்து மாம்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.இந்தாண்டு மே மாத துவக்கத்தில் இருந்தே, மழை இருந்து வருகிறது. மழை அதிகரித்ததால், மாம்பழ விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், 'கோவைக்கு சேலத்தில் இருந்து அதிகளவில் மாம்பழ வரத்து உள்ளது. வரத்து அதிகம் உள்ளதாலும், மழையாலும் விற்பனை குறைவாகவே உள்ளது. மாம்பழங்கள், ரூ.20 - ரூ.200 வரை விற்பனையாகிறது. செந்துாரம் - ரூ.50, பங்கனப்பள்ளி - ரூ.50, அல்போன்சா - ரூ.100, இமாம்பசந்த் - ரூ.140, நடுஞ்சாலை - ரூ.50, காளப்பாடி - ரூ.150, மல்லிகா - ரூ.150 என விற்பனையாகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ