உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாங்காய் பறித்தவர் தவறி விழுந்து பலி

 மாங்காய் பறித்தவர் தவறி விழுந்து பலி

கோவை: பொன்னையராஜபுரம், ராஜம்மாள் லே அவுட்டை சேர்ந்தவர் நித்யானந்தம்,40. அவரது வீட்டு வளாகத்திலுள்ள மாமரத்தில், மாங்காய் பறிக்க மாடிக்கு சென்றார். மொட்டை மாடியிலிருந்து நீளமான குச்சியை வைத்து மாங்காய் தட்டிய போது, எதிர்பாராத விதமாக தவறி தரையில் விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வயிற்று பகுதியில் கிழித்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், சிகிச்சைக்கு பிறகு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி