உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாணிக்கங்கள்

தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாணிக்கங்கள்

கோவை; ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான டிராக் சைக்கிளிங் போட்டியில், கோவை வீராங்கனைகள் மூவர் உட்பட, நான்கு பேர் தங்கம் வென்றுள்ளனர்.ஜார்க்கண்ட் மாநிலத்தில், இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம்(எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில், 68வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி நடந்தது.19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான, டிராக் சைக்கிளிங் போட்டியில், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 600க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து, 28 பேர் பங்கேற்றனர்.இதில், நேற்று முன்தினம் நடந்த, 3 கி.மீ., 'டீம் பர்சியூட்' போட்டியில், கோவையை சேர்ந்த சாதனா ஸ்ரீ, சவுபர்ணிகா, கார்த்தியாயிணி மற்றும் துாத்துக்குடியை சேர்ந்த நிறைமதி ஆகியோர், முதலிடம் பிடித்து தங்க பதக்கங்களை குவித்துள்ளனர். வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு, கோவை மாவட்ட மற்றும் தமிழக டிராக் சைக்கிளிங் சங்க நிர்வாகிகள், வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி