சுற்றுச்சூழல் மேம்பட மாரத்தான் போட்டி
பெ.நா.பாளையம், : பெரியநாயக்கன்பாளையத்தில் சுற்றுச்சூழல் மேம்பட மாரத்தான் போட்டி நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமி செட்டிபாளையம் சால்சர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தனது ஊழியர்களுக்காக சிறப்பு மாரத்தான் போட்டியை ஏற்பாடு செய்து இருந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரும் வகையில் இப்போட்டி நடந்தது. போட்டியை இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் துரைசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சால்சர் ஊழியர்கள், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சாமி செட்டிபாளையத்தில் துவங்கி, கோவனுார் சென்று அடைந்தனர்.