உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ மாரத்தான்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ மாரத்தான்

கோவை; செப்., மாதம் குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகவும், செப்., 29ம் தேதி உலக இருதய தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. இருதயக் குறைபாடு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், ஜி.கே.என்.எம்., மருத்துவமனை சார்பில், மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 'ரன் பார் லிட்டில் ஹார்ட்ஸ்' எனும் மாரத்தானின் மூன்றாம் பதிப்பு, செப்., 28ல் பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளியில், காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. மருத்துவமனை வளாகத்தில், மாரத்தான் டி - சர்ட் மற்றும் பதக்கம் வெளியீட்டு நிகழ்வு நடந்தது. அனைத்து வயதினரும், 12 முதல் 18, 18 வயதுக்கு மேற்பட்ட என மூன்று பிரிவுகளில் நடக்கிறது. வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும். மாரத்தானை எல்.எம்.டபுள்யு., லட்சுமி மில்ஸ் லிமிடெட் மற்றும் லட்சுமி கார்டு குளோத்திங் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன. மாரத்தான் டி-சர்ட் அறிமுக விழாவில், ஜி.கே.என்.எம்., மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசுவாமி, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் விஜய குமார், குழந்தைகள் இருதய டாக்டர் கல்யாண சுந்தரம், குழந்தைகள் ரத்தவியல் மற்றும் ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை டாக்டர் அஜீதா, குழந்தைகள் இருதயவியல் டாக்டர் சனச்சிதா ஹரிணி ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ