மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஜமீன் கோட்டாம்பட்டி மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா நடந்தது.பொள்ளாச்சி அருகே, ஜமீன் கோட்டாம்பட்டி மாரியம்மன் கோவிலில், மஹா கும்பாபிேஷக விழா கடந்த மாதம், 28ம் தேதி முளைப்பாலிகை இடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 6ம் தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து முளைப்பாரி எடுத்தல், முதல் காலயாகம், இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.நேற்றுமுன்தினம் காலை, 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.அதன்பின், விமான கும்பாபிேஷகமும், மாரியம்மனுக்கு பரிவாரசகிதம் மஹா கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மஹா அபிேஷகம், தச தானம், தச தரிசனம், அலங்காரம், திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உற்சவர் திருவீதி உலா சென்று அருள்பாலித்தார்.