உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மார்க்சிஸ்ட் எம்.பி., புகார் தமிழக பா.ஜ., பதிலடி

மார்க்சிஸ்ட் எம்.பி., புகார் தமிழக பா.ஜ., பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வெளியுறவு அமைச்சக அலுவலகங்களில், குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இது தொடர்பான அறிவிப்பில், ஹிந்தி, சமஸ்கிருத மொழி சார்ந்த அறிவு, விரும்பத்தக்க தகுதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தன. இதற்கு கண்டனம் தெரிவித்து, அதை நீக்கும்படி, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.பி., வெங்கடேசன் கடிதம் எழுதி உள்ளார்.

அதற்கு, தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அளித்துள்ள பதில்:

நீங்கள் குறிப்பிட்ட மத்திய அரசு விளம்பரத்தில், ஹிந்தி, சமஸ்கிருதம் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் உள்ளது. கட்டாயம் ஹிந்தி தேவை என சொல்லப்படவில்லை. இதில், எங்கே ஹிந்தி திணிப்பு உள்ளது. எழுத்தாளரான உங்களுக்கு தேவைக்கும், விருப்பத்திற்கும் வித்தியாசம் தெரிந்திருக்கும். மக்களின் உணர்ச்சியை துாண்டி குளிர்காய்ந்த காலம் மலையேறி விட்டது. தமிழ் பயிற்றுவிக்க, டிஜிட்டல் தொழில்நுட்பம், வெளிநாட்டு மொழி தெரிந்திருந்தால், கூடுதல் சிறப்பு என்றும் சொல்லப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக அல்லது அலுவல் ரீதியாக தேர்வு செய்யப்படும் நபர், துாதரக வேலைக்கும் நியமிக்கப்படுவார் என குறிப்பு உள்ளது. இப்படி வேலை தரும்போது, அவருக்கு ஹிந்தி தெரிந்திருந்திருந்தால் நல்லது தானே. அந்த அடிப்படையில் தான் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.தமிழ் மட்டுமே தெரிந்திருக்கும் ஒரு தோழரை, நீங்கள் கேரளாவுக்கு பணி செய்ய அனுப்புவீர்களா? இல்லை, தமிழுடன் மலையாளமும் தெரிந்த நபரை அனுப்புவீர்களா? நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

ஆரூர் ரங்
செப் 21, 2024 11:39

நாட்டின் பெரும்பான்மையான மொழிகளில் முப்பது முதல் ஐம்பது சதவீத சமஸ்கிருத கலப்பு உள்ளது. ( தொல்காப்பியம் திருக்குறளில் கூட சமஸ்கிருதச் சொற்கள் ஏராளமாக உள்ளன). அதனை அறிந்தவர்களுக்கு மற்ற பாரத மொழிகளைக் கற்பதும் கற்பிப்பதும் மிகவும் எளிது. பயங்கரவாத இன வெறுப்பை கண்டிக்கும் கூட்டம் சமஸ்கிருத மொழி வெறுப்பு பிரச்சாரத்தில் மட்டும் மும்முரமாக ஈடுபடுகின்றது. மொழி வெறுப்பு இன வெறியை விட ஆபத்தானது


C.SRIRAM
செப் 21, 2024 11:25

மதுரை எம்பீ சுத்த தண்டம்


Kanns
செப் 21, 2024 10:49

Why such Hi-Biased AntiNation & AntiNative PeopleReligionCulture Language are Continuing as Peoples Rep. Sack him as hes elected by Alliance Vote%


தமிழ்வேள்
செப் 21, 2024 09:54

எந்த ஒரு மொழிப்பாட ஆசிரியருக்கும் அவரது கற்பிக்கும் மொழி தவிர மேலும் இரண்டு மொழிகளாவது தெரிந்தால்தான் மொழி கற்பித்தல் திறன் மேம்பாட்டு அடையும்.திராவிடத்துக்கு முன்பு வரை மொழி ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் சமஸ்கிருதம் மற்றும் பெரும்பாலான பேர்களுக்கு தெலுங்கு மொழியும் நன்றாக தெரியும்... கற்பித்தல் திறன் நன்றாக இருந்தது என்பதும் நிதர்சனமே... ஆனால் திராவிட வாத்தியார்களுக்கு தமிழே தகராறு.. அண்ணாதுரை கருணாநிதி வகையறாக்களின் பாலியல் வக்கிர இலக்கியம் மட்டுமே நன்கு தெரியும் என்பதால் தமிழகத்தின் கல்வி திறன் தரம் அழிந்து தரைரேட்டில் நாறிக்கொண்டு உள்ளது. நெ.து.சு. போன்றவர்கள் இருந்த கல்வி துறையில் தற்போது திண்டுக்கல் லியோனி போன்ற ஆபாச பேச்சாளர் கள் இருந்தால் இதுதான் நிலைமை..போக்சோ வழக்கு திராவிட ஆசிரியருக்கு கூடுதல் தகுதி என்று ஆகிவிட்ட பின்பு என்ன செய்வது?


Svs Yaadum oore
செப் 21, 2024 09:45

மதுரை முழுக்க குப்பை கூளம் , ரோடுகள் குண்டும் குழியுமாக சுகாதார கேடு என்று நாறிக் கொண்டு உள்ளது ....அதை கவனித்து சரி செய்ய வக்கில்லை .....ஆனால் தமிழுக்கு கொடி பிடித்து கிளம்பிடுவானுங்க ....இவனுங்கதான் என்னமோ தமிழை காப்பாற்றியது போல ....உருது மொழி தெரிந்திருப்பது விரும்பத்தக்கது என்றால் உடனே அதுக்கு சரி என்பார்கள் ....


Duruvesan
செப் 21, 2024 09:29

பிட் பாத்து எழுதறவன் எழுத்தாளர், கருமம்


பாமரன்
செப் 21, 2024 09:27

சேகர்னு பேர் இருந்தாலே காமெடி தான் போல... வெளியுறவு துறையில் வேலை... கிட்டத்தட்ட அனைத்து பரிவர்த்தனைகள் ஆங்கிலத்தில் தான் இருக்கும்... ஆபீஸ் கூட்ட பெருக்க வர்றவங்ககிட்ட பேச பக்கத்தில் உள்ள பாணி பூரி பீடா கடையில் நல்லா பேசி ஐட்டங்களை வாங்கி திங்க ஹிந்தி வேணும்னு சொன்னால் ஓகே... சமஸ்கிருதம் எதற்காம்,.. கடவுள்ட்ட பேசி புஷ்பகவிமாணம் அரேஞ்ச் பண்ணி துறை ரீதியாக வெளிநாட்டு ட்ராவல் பண்ணவா... சேகர் மட்டுமல்ல பாஞ்சு வந்து பீப்பி ஊதற எந்த பகோடாவும் இந்த சமஸ்கிருத மேட்டரை டச் பண்ணல... வேற ப்ரேக்கிங் நியூஸ் டீம்காவை திட்டுற மாதிரி போடுங்க ஷாமியோவ்....


Svs Yaadum oore
செப் 21, 2024 12:23

ஆபீஸ் கூட்ட பெருக்க வர்றவங்ககிட்ட பேச பக்கத்தில் உள்ள பாணி பூரி பீடா கடையில் நல்லா பேசி ஐட்டங்களை வாங்கி திங்க உருது மொழி வேணும்னு சொன்னால் ஓகே.....அதனால் தான் விடியல் அரசு , தமிழன் வரிப்பணத்தில் நடக்கும் உருது பள்ளியில் தமிழ் பாடம் படிக்க தேவையில்லை என்று மத சார்பின்மையாக உத்தரவு போட்டது ....


Iyer
செப் 21, 2024 08:39

தமிழுக்கும் ஹிந்திக்கும் 40% வார்த்தைகள் பொதுவானவை. தமிழறியாத ஒரு ஹிந்திகாரருக்கு - தமிழ் கற்றுக்கொடுக்க மிகவும் பொருத்தமானவர் - இரண்டு மொழியையும் அறிந்தவர் தான்.


Iyer
செப் 21, 2024 08:34

வெளியுறவு அமைச்சக அலுவலகங்களில் வேலை செய்பவர் பெரும்பாலும் ஹிந்தி பேசுபவர். அவர்களுக்கு நன்கு தமிழ் கற்று கொடுக்க - தமிழ் + ஹிந்தி தெரிந்தவரால் தான் முடியும்.


சுராகோ
செப் 21, 2024 08:26

ஒரு மொழியின் மீது வெறுப்பை விதைக்கிறாரகள். செய்யவதெல்லாம் இவர்கள் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவார்கள்.


Duruvesan
செப் 21, 2024 09:28

உனக்கு பேரே உருதுல, நீயெல்லாம் ஏன் தமிழ் பத்தி பேசறே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை