மாதா ஆலயத் தேர்த்திருவிழா
வால்பாறை: கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வால்பாறை அடுத்துள்ளது கருமலை எஸ்டேட். இங்குள்ள வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் தேர்த்திருவிழா வரும், 13ம் தேதி நடக்கிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் காலை திருஇருதய ஆலய பங்குதந்தை ஜெகன்ஆண்டனி தலைமையில் திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து திருப்பலி, சிறப்பு ஜெபவழிபாடு நடந்தது. விழாவில், வரும் 13ம் தேதி மாலை, 5:30 மணிக்கு ஆடம்பரக்கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. தொடர்ந்து கருமலை, வெள்ளமலை எஸ்டேட் பகுதியிலிருந்து அன்னை வேளாங்கண்ணி மாதா சொருபம் தாங்கிய தேர்பவனி நடக்கிறது. வரும், 14ம் தேதி அன்னை வேளாங்கண்ணி மாதா பிறந்த நாள் மற்றும் தேர்த்திருவிழாவையொட்டி திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. அதன்பின் நவநாள் ஜெபவழிபாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை மற்றும் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.