உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மே தின கொண்டாட்டம்; தொழிற்சங்கத்தினர் பேரணி

மே தின கொண்டாட்டம்; தொழிற்சங்கத்தினர் பேரணி

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது.அ.தி.மு.க., கோவை புறநகர் தெற்கு மாவட்ட, பாரம் துாக்கும் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், காந்தி மார்க்கெட்டில்தொழிற்சங்க கொடி ஏற்றப்பட்டது. எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் குருசாமி வரவேற்றார். மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ்ராஜா, மாவட்ட பாசறை செயலாளர் ரமேஷ், நகர பொருளாளர் கனகு உள்பட பலர் பங்கேற்றனர்.* திருவள்ளுவர் திடலில், 45ம் ஆண்டு தி.மு.க., பாரம் துாக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடந்த மே தின விழாவில்,சட்ட சதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகித்தார். பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு மலர் துாவி மரியாதை செய்தார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், தொழிற்சங்க கொடியேற்றினார்.நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகராட்சி துணை தலைவர் கவுதமன், கவுன்சிலர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.* பொள்ளாச்சி தாலுகா திராவிட ஆட்டோ ஒட்டுநர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், ஆட்டோ பேரணி நடந்தது. மகாலிங்கபுரம் சர்க்கஸ் மைதானத்தில் பேரணி நிறைவடைந்தது. தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் மற்றும் நகராட்சி தலைவர் சியாளமா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.* பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில், மே தினத்தையொட்டி பொள்ளாச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் கவுரவிக்கப்பட்டனர்.அவர்களுக்கு அமைப்பினர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.* ஒப்பந்த துாய்மை பணியாளர்களின் பணி நிரந்தரம் கோரி, மே தின பேரணி பொள்ளாச்சியில் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொது பணியாளர் சங்க நிர்வாகி முருகானந்தம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி., அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் வேல்முருகன், பல்வேறு அமைப்பினர், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.* வால்பாறை நகர கழக தி.மு.க., சார்பில் கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் மே தின கொடியேற்றுவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நடந்தது. நகர செயலாளர் சுதாகர் வரவேற்றார். எம்.பி., ஈஸ்வரசாமி, மாநில தொழில்நுட்ப அணி இணை செயலாளர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார், நகராட்சி கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.* உடுமலையில், இ.கம்யூ., கட்சி ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் மே தின விழா ஊர்வலம் நேற்று நடந்தது. உழவர் சந்தை அருகிலுள்ள கட்சி அலுவலகத்திலிருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு, மாநில பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார்.மாவட்ட துணைத்தலைவர் இசாக், நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஜீவா சிலம்பாட்ட பயிற்சி மையம் சார்பில் சிலம்பாட்டம் நடந்தது. நகரின் பிரதான வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், வெங்கடகிருஷ்ணா ரோட்டில் நிறைவடைந்தது. அங்கு, மே தின பொதுக்கூட்டம் நடந்தது.* உடுமலையில் மா.கம்யூ., -- சி.ஐ.டி.யு., சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. சந்தை ரோட்டில் துவங்கிய பேரணிக்கு, நகரச்செயலாளர் பாலதண்டபாணி தலைமை வகித்தார்.சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ரங்கராஜ், நிர்வாகிகள் பங்கேற்றனர். நகரின் பிரதான ரோடுகள் வழியாக சென்ற பேரணி, தளி ரோடு நகராட்சி அலுவலகம் முன் நிறைவடைந்தது. அங்கு, மே தின விழா பொதுக்கூட்டம் நடந்தது.* உடுமலையில், இந்திய தொழிற்சங்கம் எப்.ஐ.டி.யு., அலுவலகத்தில்தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் குணசேகரன், தி.மு.க., நகர துணைச்செயலாளர் செந்தில்குமார், தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தலைவர் நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை