மேலும் செய்திகள்
வேலை வழங்க கோரி பயனாளிகள் ஆர்ப்பாட்டம்
05-Sep-2025
பொள்ளாச்சி: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். தாலுகா செயலாளர் பட்டீஸ்வரமூர்த்தி, ஆனைமலை தாலுகா தலைவர் பழனிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொள்ளாச்சி தாலுகா தலைவர் ஸ்டாலின் பழனிசாமி, கமிட்டி உறுப்பினர்கள் ஸ்ரீரங்கன், அமிர்தவல்லி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட உபரி நிலங்களை நிலமற்ற விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். கோரிக்கையின் பேரில் ஏற்கனவே மனைப்பட்டா மட்டும் வழங்கப்பட்டது. நிலம் அளந்து அடையாளம் காட்டப்படாத நிலையுள்ளது. நிலத்தை அளந்து அடையாளப்படுத்தி பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். குடியிருக்க வீடு இல்லாமல் வாடகை வீட்டிலும், தெருவோரங்களிலும் வசிக்கும் மக்களுக்கு அரசு புறம்போக்கு இடங்களையும், பஞ்சமி நிலங்களையும், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளித்து பட்டா வழங்க வேண்டும். வீடு கட்ட, 10 லட்சம் ரூபாய் அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நிர்வாகிகள் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, சப் - கலெக்டர் அலுவலகத்தில், 404 மனுக்கள் வழங்கப்பட்டது.
05-Sep-2025