துாய்மை பணியாளர்களுக்கு இன்று மருத்துவ முகாம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், இன்று துாய்மை பணியாளர்களுக்கான சிறப்பு பல்நோக்கு மருத்துவ முகாம் நடக்கிறது.பொள்ளாச்சி நகராட்சி சார்பில், துாய்மை பணியாளர்களுக்கான சிறப்பு பல்நோக்கு மருத்துவ முகாம் இன்று நடைபெற உள்ளது. முகாமில், பொது மருத்துவம், இருதய நோய், கண், நரம்பியல், சிறுநீரகம், நீரழிவு, புற்றுநோய் உள்ளிட்ட, 19 மருத்துவ பிரிவுகளில் பரிசோதனை நடக்கிறது. இதில், துாய்மை பணியாளர்கள் பங்கேற்று பயன்பெறலாம், என, நகராட்சி கமிஷனர் கணேசன் தெரிவித்தார்.