காசநோய் கண்டறிய மருத்துவ முகாம்
வால்பாறை : வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்களில், பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காசநோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் வகையில், சுகாதாரத்துறை சார்பில் நடமாடும் மருத்துவ முகாம் நடந்தது.மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி உத்தரவின் பேரில், வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் தொழிலாளர்களுக்கு காசநோய் குறித்து, பரிசோதனை செய்யப்பட்டது.சோலையார் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாபுலட்சுமணன் தலைமையில் மருத்துவக்குழுவினர், ஒவ்வொரு எஸ்டேட் பகுதியாக சென்று, தொழிலாளர்களை பரிசோதனை செய்தனர்.டாக்டர்கள் கூறியதாவது:வால்பாறையில் மாறி வரும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், மக்களுக்கு மூச்சுத்திணறல், சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்னை உள்ளது. காசநோயினால் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.இடைவிடாத இருமல், காய்ச்சல் , சளி இருந்தால், தன்னிச்சையாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.வெளியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க 'மாஸ்க்' அணிவது அவசியம். வால்பாறையில் கடுங்குளிர் நிலவும் நிலையில், குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும்.இவ்வாறு, கூறினார்.