உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து வழங்க கூடாது! ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை

பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து வழங்க கூடாது! ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை

பொள்ளாச்சி; 'பொள்ளாச்சி மெடிக்கல் ஷாப்களில், டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்க கூடாது,' என, மெடிக்கல், கூரியர் சர்வீஸ் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சியில் உள்ள மெடிக்கல் ஷாப் மற்றும் கூரியர் சர்வீஸ் உரிமையாளர்களுக்கான கூட்டம், மகாலிங்கபுரம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. ஏ.எஸ்.பி., சிருஷ்டிசிங் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் மேனகா மற்றும் போலீசார் பங்கேற்றனர்.கூட்டத்தில், போலீசார் கூறியதாவது:மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் வழங்ககூடாது; சிறுவர்கள், இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வலிமருந்துகள் மற்றும் ஊசிகள் மருத்துவ பரிந்துரை சீட்டு இல்லாமல் கட்டாயம் வழங்க கூடாது.அனைத்து மெடிக்கல் ஷாப்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மேலும், நுழைவாயிலும், சாலையை எதிர்கொள்ளும் இடத்திலும் கேமரா நிறுவ வேண்டும்.வலி நிவாரணி மற்றும் சிரப் கேட்கும் குழந்தைகள், இளைஞர் குழுக்களுக்கு மருத்துவ சான்றிதழ் இல்லாமல் வழங்க கூடாது. அவர்களிடம் உள்ள மருந்துகளுக்கு முறையான ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.மருந்துகளை விற்கும் போது, வாடிக்கையாளரின் பெயர் மற்றும் முகவரியை குறிப்பிடும் பில் வழங்குவது கட்டாயமாகும்.கூரியர் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர் விபரங்களை தொடர்ந்து பதிவு செய்து சந்தேகத்துக்குரிய பார்சல்களை கண்காணிக்க வேண்டும்.ஏதேனும் ஒரு கூரியர் நிறுவனத்தால் அனுப்பப்படும் சந்தேகத்திற்கிடமான பார்சல் குறித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும். கூரியர் அலுவலகத்தில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி