உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 40 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு; மனசெல்லாம் பூரிப்பு

40 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு; மனசெல்லாம் பூரிப்பு

சூலுார்; சூலுார் ஆர்.வி.எஸ்., மெட்ரிக் பள்ளியில், கடந்த, 1984 முதல், 1994 வரை படித்த மாணவ, மாணவியர், மீண்டும் சந்திக்க முடிவு செய்தனர். 'மீண்டும் பள்ளிக்கு' என்ற கருத்துருவில், ஒருங்கிணைப்பு குழுவினர் முன்னாள் மாணவர்களுக்கு தகவல் அனுப்பினர்.கனடா, துபாய் உள்ளிட்ட வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பல ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட அவர்கள், ஒவ்வொருவரும் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஆசிரிய, ஆசிரியைகளுக்கு நன்றி கூறி, மாணவர்கள் கவுரவித்தனர். 12 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக, 1 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்கினர். ஆர்.வி.எஸ்., குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் செந்தில் கணேஷ்,பங்கேற்றார். தொடர்ந்து, பள்ளி பருவத்தின் நினைவுகளை மாணவர்கள் பகிர்ந்து பூரிப்படைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை