உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சந்திப்பு பகுதியில் மெகா பள்ளம்; தடுமாறும் வாகன ஓட்டுநர்கள்

சந்திப்பு பகுதியில் மெகா பள்ளம்; தடுமாறும் வாகன ஓட்டுநர்கள்

உடுமலை; நான்கு வழிச்சாலை சந்திப்பில், தார் ரோடு அமைக்கப்படாததால், மழைக்காலங்களில், செஞ்சேரிமலை ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறுவது தொடர்கதையாக உள்ளது.பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், ஏரிப்பாளையம் அருகே, செஞ்சேரிமலை ரோடு குறுக்கிடுகிறது.இந்த இடத்தில், நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்கள் செல்ல மேம்பாலமும், அந்த ரோட்டில் இருந்து பிரியும் வாகனங்களுக்கு அணுகுசாலையும் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பால கட்டுமான பணிகளுக்கு பிறகு, செஞ்சேரிமலை ரோடு பள்ளமாக மாறி விட்டது.பாலத்தின் கீழ் செல்லும் வாகனங்கள், பல அடி பள்ளத்தில், பயணிக்க வேண்டியுள்ளது. சரிவான இப்பகுதியில், மழைக்காலத்தில், மண் அரிப்பு ஏற்படுகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் திடீர் பள்ளத்தில், நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.மேலும், அணுகுசாலையில் இருந்து வரும் வாகனங்கள், உடுமலைக்கு செல்ல திரும்பும் போது சந்திப்பு பகுதியில், நெரிசல் ஏற்படுகிறது.வாகனங்கள் திரும்புவது தெரியாததால், பெதப்பம்பட்டி, செஞ்சேரிமலை நோக்கி செல்லும் வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர். சந்திப்பு பகுதியில் பிரச்னைக்கு தீர்வாக பாலத்தில் இருந்து மண்பாதையாக உள்ள பகுதியை தார்ரோடாக மேம்படுத்த வேண்டும்.சந்திப்பு பகுதியில் தானியங்கி சிக்னல் பொருத்தவும், வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை