நேரு கல்வி குழுமத்தின் நிறுவனர் நினைவு தினம்
கோவை; நேரு கல்வி குழும நிறுவனங்களின்நிறுவன தலைவரான தாஸ்,16வது நினைவு தினம், திருமலையாம்பாளையத்தில் உள்ள பி.கே.தாஸ் கலையரங்கில் நடந்தது. மறைந்த நிறுவன தலைவருக்கு, மலர் அஞ்சலி மற்றும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.நேரு கல்வி குழும நிறுவனங்களின் செயலாளர் கிருஷ்ணகுமார், தரமான கல்வியை வழங்கவும், அறிவு, மதிப்புகள் மற்றும் ஒழுக்கத்தின் மூலம் இளைஞர்களை மேம்படுத்தவும் தனது தந்தையின் அயராத முயற்சிகளை நினைவு கூர்ந்தார்.விழாவில், ஸ்வயம்பு குரு மஹா சன்னிதானத்தில், ராஜா தேவேந்திர சுவாமிகளின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளில், சிறந்த மதிப்பெண் எடுத்த நேரு குழும ஊழியர்களின், 33 குழந்தைகளுக்கு நினைவுப் பரிசு, எழுதுபொருட்கள் அடங்கிய பள்ளிப் பை மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.நேரு கல்வி குழும நிறுவனங்களின் முதல்வர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.