உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரமடையில் இன்று மனவளக்கலை பயிற்சி

காரமடையில் இன்று மனவளக்கலை பயிற்சி

காரமடை: காரமடையில் இன்று மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்பு துவங்குகிறது.காரமடையில், கோவை சாலையில் திருமூலர் வீதி, அரவிந்தர் காலனியில், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை செயல்படுகிறது. இங்கு முழுமை நல வாழ்விற்கு, மனவளக்கலை யோகா, 12 நாள் பயிற்சி வகுப்பு துவங்குகிறது. இன்று (9ம் தேதி) மாலை, 6:00 மணிக்கு அறிமுக வகுப்பு நடக்க உள்ளது. 12 நாள் பயிற்சியில், உடற்பயிற்சி, தியானம், காயகல்ப பயிற்சிகள் நடைபெற உள்ளன. இப்பயிற்சி, மாலை, 6:00 மணியிலிருந்து இரவு, 7:30 மணி வரை நடைபெறும். பயிற்சியில் பங்கு கொள்ள விரும்பும் நபர்கள், விவரங்களை தெரிந்து கொள்ள 63814 90409 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ