மேலும் செய்திகள்
வேளாண் கல்லுாரி சார்பில் மரக்கன்று நடும் விழா
18-Nov-2024
பொள்ளாச்சி; அமிர்தா வேளாண் கல்லுாரி மாணவர்கள், தக்காளி சாகுபடி விவசாயிகளுக்கு, அர்கா நுண்ணுாட்ட சத்து மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தனர்.கிணத்துக்கடவு அமிர்தா வேளாண் கல்லுாரி மாணவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்துடன் இணைந்து, ஊரக வேளாண்மை செயல்முறை பயிற்சி அனுபவ திட்டத்தின் கீழ், பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வகையில், வடபுதுாரில், அர்கா நுண்ணுாட்ட சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, தனராஜ் என்பவரின் தக்காளி தோட்டத்தில், விவசாயிகளை ஒன்றிணைத்து, அர்கா நுண்ணுாட்ட சத்து உரங்களின் பயன்பாடு மற்றும் உர மேலாண்மை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.வேளாண் அறிவியல் நிலையம், உழவியல் துறை வல்லுநர் சுரேஷ்குமார், தோட்டக்கலை பிரிவு வல்லுநர் சகாதேவன், இளம்நிபுணர் துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
18-Nov-2024