நேரு மஹா வித்யாலயாவில் நுண்ணுயிரியல் துறை சங்கம்
கோவை: ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் நுண்ணுயிரியல் துறை சங்கம், 'கிளிசாண்டா 25' தொடக்க விழா நடந்தது. தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் உணவுப் பரிசோதனை ஆய்வக தர மேலாளர் பேராசிரியர் வித்யாலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர், நுண்ணுயிர் அறிவியலில் உள்ள ஆராய்ச்சி யோசனை மற்றும் நவீன அணுகுமுறை பற்றியும், உணவு பாதுகாப்பு மற்றும் தரத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். கல்லுாரி முதல்வர் சுப்பிரமணி, மேலாண்மைத்துறை இயக்குனர் முத்துக்குமார், பேராசிரியர்கள் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.