உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் 30 வழித்தடங்களில் மினிபஸ்கள் இயக்கம் துவக்கம்

கோவையில் 30 வழித்தடங்களில் மினிபஸ்கள் இயக்கம் துவக்கம்

கோவை; கோவையில் புதிய மினி பஸ் சேவையினை, நேற்று முதல்வர் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.காந்திபுரம், ஆம்னி பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சியில்,கோவை கலெக்டர் 30 புதிய மினி பஸ் சேவைகளை துவக்கி வைத்து, அனுமதி உத்தரவுகளை, பஸ் உரிமையாளர்களுக்கு வழங்கினார்.விரிவாக்கம் செய்த, 22 பழைய வழித்தடம் மற்றும் 8 புதிய வழித்தடம் என மொத்தம் 30 வழித் தடங்களில், மினி பஸ் சேவை துவக்கிவைக்கப்பட்டது.எம்.பி.,க்கள் ராஜ்குமார், ஈஸ்வரசாமி, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன், இணைப்போக்குவரத்து கமிஷனர் அழகரசு, ஆர்.டி.ஓ.,க்கள் பிரதீபா, பூங்கோதை சத்தியகுமார், கோகுலகிருஷ்ணன், கோவை மாவட்ட மினி பஸ் உரிமையாளர்கள் நல சங்கத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

CBE CTZN
ஜூன் 17, 2025 17:47

கோவை கிழக்கு சூலூர் தொகுதியில் பல கிராம பஞ்சாயத்துக்கள் பேருந்து வசதியை எதிர்பார்த்து இருக்கிறார்கள்... ஆனால் ஒரு பேருந்து சேவை கூட அறிவிக்காதது வருத்தமே... இது மக்களிடம் இருந்து இந்த ஆட்சியாளர்கள் வெகு தொலைவில் இருக்கிறார்கள் என்றே காட்டுகிறது ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை