மேலும் செய்திகள்
கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை
12-May-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பகுதியில் ரயில்வே சேவைகளை மேம்படுத்த கோரி, எம்.எல்.ஏ., தாமோதரன் ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினார்.கோவை, கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் பலர், கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் சேவையை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். இங்கு, கூடுதல் ரயில்வே வசதிகளை மேம்படுத்த வேண்டுமென, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், தெற்கு ரயில்வே அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.இதில், கூறியிருப்பதாவது:கோவை, இருகூர் --- போத்தனூர் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். போத்தனூரில், ரயில்வே கோச் பராமரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், நடைமேடையை நீட்டிப்பு செய்து பெரிய அளவிலான ரயில்கள் நின்று செல்லும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.இத்துடன், பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டும். இங்கு பயணியர் முன்பதிவு கவுன்டர் அமைக்க வேண்டும்.கிணத்துக்கடவு சுற்று வட்டாரப் பகுதியில் அதிகளவு இளைஞர்கள் கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வதால், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, கிணத்துக்கடவு வழியாக சென்னைக்கு புதிதாக ரயில் சேவையை துவங்க வேண்டும்.மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி ரயில் வாரம் இரு முறை இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையை, வாரம் மூன்று முறை இயக்க வேண்டும். போத்தனூர் -- தாம்பரம் ரயில் இரவு 12:00 மணிக்கு இயக்கப்படுகிறது. இதனால், பயணியர் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க இந்த ரயிலை, இரவு, 10:00 மணிக்கு இயக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், மக்கள் பயன்பெறுவர்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
12-May-2025