உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரூர் கோவிலில் இன்று முதல் மொபைல் போனுக்கு தடை

பேரூர் கோவிலில் இன்று முதல் மொபைல் போனுக்கு தடை

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பக்தர்கள் இன்று முதல் மொபைல்போன் எடுத்துச்செல்ல, கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலாக, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இன்று (ஜூலை 24) முதல் பக்தர்கள் மொபைல்போன் எடுத்துச்செல்ல, கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. கோவிலுக்குள் நுழைந்ததும், டிக்கெட் வழங்கும் அறைக்கு எதிரே உள்ள அறையில், பக்தர்கள் தங்களது மொபைல்போன்களை கொடுத்துவிட்டு, சுவாமி தரிசனம் முடித்து வெளியே செல்லும்போது, மொபைல்போன்களை பெற்று செல்லலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி