மேலும் செய்திகள்
தொடர் மழையால் வைக்கோல் கட்டுகள் நாசம்
25-Aug-2025
கோவை; வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கை: வரும் 21 வரை, கோவை மாவட்டத்தில் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில், கனமழை பெய்யக்கூடும். கால்நடைகளை மலையோரப் பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அனுப்புவதைத் தவிர்க்கவும். மத்திய கால வயதுடைய நெல் ரகங்களை, சம்பா நெல் நாற்றங்காலில் விதைக்கவும். நெல் விதைப்பு செய்துள்ள வயல்களில் இரவில் நீர் தேக்கி, காலையில் வடிப்பதனால், மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். மழை போதுமானதாக இருப்பின், நேரடி நெல் வயல்களில், மத்திய கால வயதுடைய நெல் ரகங்களை நேரடி விதைப்பு செய்யலாம்.தக்காளிக்கு போதிய வடிகால் வசதி செய்யவும் திராட்சையில் அடிச்சாம்பல் நோய்க்கான, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ளவும்.
25-Aug-2025