மேலும் செய்திகள்
இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை
20-Sep-2025
கோவை; கோவை மாவட்டத்தில் இன்று பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று, கோவையில் பகுதி மேகமூட்டமாக காணப்படும். இடியுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்பு. நாளை மற்றும் நாளை மறுநாள், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்; லேசான மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். வரும் 18,19ம் தேதிகளில், காலை நேரத்தில், பகுதி மேகமூட்டமாக காணப்படும். மாலை மற்றும் இரவு நேரத்தில், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சூறைக்காற்றும் எதிர்பார்க்கப்படுவதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20-Sep-2025