உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பள்ளிக்கு நவீன கற்றல் வசதி

 பள்ளிக்கு நவீன கற்றல் வசதி

செல்வபுரம்: செல்வபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பதற்காக நவீன டிஜிட்டல் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. மெட்ரோ டைனமிக் ரோட்டரி இ-கிளப் சார்பில், மாணவர்களின் கற்றல் முறையை மேம்படுத்தும் நோக்கில் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான நவீன தொடுதிரை பலகை (டச் ஸ்கிரீன்) பள்ளிக்கு வழங்கப்பட்டது. ரோட்டரி தலைவர் மகேஷ் பிரபு, மெட்ரோபோலீஸ் சங்க தலைவர் ஷைலேந்திர பன்ஷாலி கலந்து கொண்டனர். சரிவிகித உணவின் முக்கியத்துவம் மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. தினசரி செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகள் பற்றி விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை