உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டாஸ்மாக் பாரில் பணம் பறிப்பு

டாஸ்மாக் பாரில் பணம் பறிப்பு

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே அரிவாளை காட்டி, மிரட்டி பணம் பறித்த இரு நபர்களில் ஒருவரை கைது செய்தனர். நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரை டாஸ்மாக் பாரில் பணியாற்றி வருபவர் அருண்குமார், 23. இவர் பணியில் இருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், 38, முகேஷ், 22. ஆகியோர் அரிவாளை காட்டி மிரட்டி அருண்குமாரிடமிருந்த, 2000 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி பணத்தை திருடி சென்ற பிரகாஷை கைது செய்தனர். முகேஷை தேடி வரு கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை