மேலும் செய்திகள்
மதுரையில் எச்.எம்.பி., வைரஸ் தாக்கமில்லை
07-Jan-2025
கோவை; கோவை மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், தனியார், அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக காய்ச்சலுக்கு சிகிச்சை எடுப்பவர்கள் பட்டியல் தொகுக்கப்படுகிறது.பருவநிலை காரணமாக டெங்கு, உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பாதிப்புகள் உள்ளன. இந்நிலையில், ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் பாதிப்புகளை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்க, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தற்போது, சீனாவில் பரவுவதாக கூறப்படும், எச்.எம்.பி.வி., வைரஸ் பாதிப்பு, இந்தியாவில் முதன்முறையாக பெங்களூருவில், இரண்டு குழந்தைகளுக்கு நேற்று உறுதி செய்யப்பட்டது.கோவையில் இப்பாதிப்பு இதுவரை இல்லை. எனினும், காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமியிடம் கேட்டபோது, ''கோவையில் அரசு, தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சல் காரணமாக உள்நோயாளிகளாக சிகிச்சை எடுப்போர் விபரங்களை, மாவட்ட அளவில் தொகுத்துள்ளோம். வட்டார அளவில் சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.காய்ச்சல் சிகிச்சை எடுப்பவர்களுக்கு டெங்கு, மலேரியா உட்பட 5 பரிசோதனைகளை செய்து விடுகிறோம். கோவையில் இதுவரை பாதிப்பு பதிவாகவில்லை,'' என்றார்.
07-Jan-2025