உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பருவ மழை முன்னெச்சரிக்கை ஒன்றிய நிர்வாகம் அறிவுறுத்தல்

பருவ மழை முன்னெச்சரிக்கை ஒன்றிய நிர்வாகம் அறிவுறுத்தல்

கிணத்துக்கடவு, ;கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள, 34 ஊராட்சிகளில் இருக்கும் தொகுப்பு வீடுகள் மற்றும் அரசு திட்ட வீடுகள் பராமரிப்பு இல்லாததால், அங்குள்ள மக்களை வேறு இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.ஊராட்சி பகுதிகளில் மணல் மூட்டைகள், பொக்லைன் இயந்திரங்கள், குளோரின் பவுடர் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் வைத்திருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அவசர காலத்தில் மக்கள் தங்குவதற்கு சமுதாய கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கிராமப்புறங்களில் மழையால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், 04259 242027 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன்பாபு மற்றும் விஜயகுமார் ஆகியோர் கூறியதாவது:கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 95 சதவீதம் தொகுப்பு வீடுகளில் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், 23 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, 171 வீடு அனுமதி பெறப்பட்டு, அதில், 75 வீட்டு பணிகள் நிறைவடைந்தது. 96 வீடுகள் பணி முடியும் தருவாயில் உள்ளது.வீடுகள் பழுது பார்ப்பு திட்டத்தில், 218 வீடுகள் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, கிராமப்புறங்களில் சேதம் அடையும் நிலையில் இருக்கும், 10 வீடுகள் அகற்றம் செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில், பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ