உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போஸ்ட் ஆபீஸ் ஏ.டி.எம்., கார்டுக்கு மாதக்கணக்கில் காத்திருப்பு

போஸ்ட் ஆபீஸ் ஏ.டி.எம்., கார்டுக்கு மாதக்கணக்கில் காத்திருப்பு

அன்னுார்; 'ஏ.டி.எம்., கார்டு பெற, ஆறு மாதங்களாக, தபால் அலுவலகத்திற்கு நடக்கிறோம்,' என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.அன்னுாரில் கிளை தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கானோர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். தொடர் வைப்பு திட்டம், நிரந்தர வைப்பு திட்டம், மாதாந்திர வட்டி திட்டம், மூத்த குடிமக்கள் திட்டம், பி.பி.எப்., ஆகியவற்றில் பணம் செலுத்தி வருகின்றனர். தபால் அலுவலகத்தில் செலுத்தப்படும் பணத்திற்கு மத்திய அரசின் உத்தரவாதம் உள்ளதால் பலரும் ஆர்வமாக பணம் செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த ஆறு மாதமாக சேமிப்பு கணக்கு, வைப்பு நிதி, மாதாந்திர வட்டி திட்டத்தில் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம்., கார்டு வழங்கப்படவில்லை.இது குறித்து மாதாந்திர வட்டி திட்டத்தில் தொகை செலுத்தியவர்கள் கூறுகையில், 'வைப்புத் தொகை செலுத்தி ஆறு மாதம் ஆகிவிட்டது. ஏ.டி.எம்., கார்டுக்காக நடையாய் நடக்கிறோம். இது வரை தரவில்லை.ஒவ்வொரு மாதமும் தபால் அலுவலகம் சென்று, படிவம் நிரப்பி, நீண்ட நேரம் காத்திருந்து வட்டி வாங்க வேண்டி உள்ளது. இதுகுறித்து தலைமை தபால் அலுவலகத்திலும் புகார் தெரிவித்துள்ளோம். எனினும் இதுவரை ஏ.டி.எம்., கார்டு வழங்கப்படவில்லை. விரைவில் வழங்க வேண்டும். முதியோரின் சிரமத்தை போக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை