உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முருங்கை வரத்து குறைந்தது; விலை எகிறியது

முருங்கை வரத்து குறைந்தது; விலை எகிறியது

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பகுதிகளில் முருங்கைக்காய் சாகுபடி குறைந்து வருவதால் விலை அதிகரித்துள்ளது.கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், தென்னைக்கு அடுத்தபடியாக தக்காளி மற்றும் பிற வகை காய்கள் சாகுபடி உள்ளது. இதில், முருங்கை சாகுபடி குறைந்த அளவே உள்ளது.இதனால், கடந்த டிசம்பர் மாதம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோவுக்கு, 70 முதல் 80 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆனால், தற்போது, கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.கிணத்துக்கடவு பகுதி விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை தினசரி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இதில், முருங்கை வரத்து இப்பகுதியில் இல்லாததால் வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.விவசாயிகள் கூறியதாவது: கிணத்துக்கடவு வட்டாரத்தை காட்டிலும், பிற மாவட்டங்களில் இருந்து முருங்கைக்காய் வரத்து அதிகமாக இருக்கும். தற்போது, பிற பகுதியில் இருந்து வரும் முருங்கைக்காய் வரத்தும் குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. இப்பகுதியிலும், முருங்கை சாகுபடியை துவங்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, கூறினர்.தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறியதாவது:கிணத்துக்கடவு பகுதியை காட்டிலும், திண்டுக்கல், தேனி, சின்ன தாராபுரம் போன்ற பகுதியில் இருந்து, முருங்கைக்காய் வரத்து அதிகளவு இருக்கும். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக மழை மற்றும் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மரத்தில் இருக்கும் முருங்கை பூ வீணானது.மேலும், 20 காய்கள் காய்க்கும் மரத்தில் 2 காய் மட்டும் உள்ளது. இதனால், விலை அதிகரித்துள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் கோடை துவங்கும். அப்போது, முருங்கைக்காய் வரத்து அதிகரித்து, விலை சீராகும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ