உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலத்தில் தடுமாறும் வாகன ஓட்டுநர்கள்

பாலத்தில் தடுமாறும் வாகன ஓட்டுநர்கள்

நெகமம்: பொள்ளாச்சி -– பல்லடம் ரோட்டில் தரைப்பாலம் பணிகள் முடிந்தும், ரோடு சீரமைக்காததால் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர். பொள்ளாச்சி ---– பல்லடம் ரோட்டில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதால், கடந்த சில மாதங்களாக ரோடு விரிவாக்க பணிகள் நடக்கிறது. இத்துடன் ரோட்டின் பல பகுதிகளில் தரைப்பாலம் கட்டும் பணியும் நடக்கிறது. இதற்காக ரோட்டின் ஒரு பகுதியில் குழி தோண்டி தரைப்பாலம் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் ஒரு சில இடங்களில் முடிந்தாலும், பள்ளமானது ஜல்லிக்கற்கள் மற்றும் எம்சாண்டு கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதில், ஒரு சில பகுதியில் மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக, இரவு நேரத்தில் பைக் ஓட்டுநர்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர். கடந்த சில மாதங்களாகவே தரைப்பாலம் பகுதியில் அடிக்கடி பைக் விபத்து நடக்கிறது. எனவே, தரைப்பால பகுதியை முழுமையாக சீரமைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்