மேலும் செய்திகள்
முட்செடிகளால் அபாயம் வாகன ஓட்டிகள் அவதி
22-Jan-2025
சூலுார்; சூலுார் - ராவத்தூர் ரோட்டில், எரியும் குப்பையில் இருந்து எழும் புகையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில் இருந்து ராவத்தூர் செல்லும் ரோடு உள்ளது. இந்த ரோட்டை ஒட்டி, நொய்யல் ஆறு செல்கிறது. ஆற்றங்கரையை ஒட்டி பல இடங்களில் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோவில் அருகே கிடந்த குப்பையில் தீப்பிடித்து, கரும்புகை காற்றில் பரவியது. இதனால், அந்த ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ராவத்தூர் ரோட்டில் இரவு நேரங்களில் வாகனங்களில் வரும் நபர்கள், ஆற்றங்கரையில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டி சென்று விடுகின்றனர். இருகூர் பேரூராட்சியில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. குவிந்து கிடக்கும் குப்பைக்கு வழிப்போக்கர்கள் தீ வைத்து விடுகின்றனர்.வெயில் காலம் என்பதால், தீ மள மளவென மற்ற இடங்களுக்கும் பரவி கரும்புகை காற்றில் பரவுகிறது. புகையால் அருகில் குடியிருப்போரும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். பேரூராட்சி. நிர்வாகத்தினர் குப்பை கொட்டுவோரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
22-Jan-2025