ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோவை : கோவை கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி, ஜிம்பாப்வே நாட்டின் ஹராரே இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு கோப்புகளை மாற்றிக்கொண்டனர். கல்வி, ஆராய்ச்சி, வெளிநாட்டு பல்கலையில் கூட்டாக ஆய்வு பணிகள் மேற்கொள்ளுதல், ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை மையமாக கொண்டு இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஜிம்பாப்வே நாட்டின் ஹராரே இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி துணைவேந்தர் கான்ஹூகான்வே,ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி முதல்வர் சுதா மோகன்ராம் ஆகியோர் கோப்புகளை கையெழுத்திட்டு மாற்றிக்கொண்டனர். இதில், கல்லுாரி தொழில்துறை நல்லுறவு இயக்குனர் கண்ணன் நரசிம்மன், சக பேராசிரியர்கள் பங்கேற்றனர்.