உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பார்க் இன்ஜினியரிங் கல்லுாரியில்  புரிந்துணர்வு ஒப்பந்தம்

பார்க் இன்ஜினியரிங் கல்லுாரியில்  புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை; பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையில் தொழில்துறை-யினர் மற்றும் கல்வியாளர்களின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், பெங்களூர் கே.வி.எம்., மெட்டெக் நிறுவனம் மற்றும் கோவை பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில், பார்க் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா ரவி தலைமை வகித்தார். மாணவர்களின் ஆராய்ச்சி, ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, இன்டன்ஷிப் வாய்ப்புகள், மருத்துவ அமைப்புகள் மற்றும் தயாரிப்பு செயல்பாடுகளை அறிதல், வேலைவாய்ப்புகள், தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு சாராம்சங்களை மையமாக கொண்டு கோப்புகளில் நிர்வாகிகள் கையெழுத்திட்டனர். நிகழ்வில், கே.வி.எம்., மெட்டெக் நிறுவன நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி கிருஷ்ணன், கல்லுாரி முதல்வர் லட்சுமணன், வேலைவாய்ப்பு பிரிவு இயக்குனர் பிரின்ஸ், பல்வேறு துறை தலைவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை