உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாநகராட்சி கமிஷனர் ஆய்வு  

 மாநகராட்சி கமிஷனர் ஆய்வு  

கோவை; கோவை மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஐந்து மண்டலங்களில் துாய்மைப்பணிகள், சாலைப்பணிகள், கட்டுமானப் பணிகள், 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. கோவை மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் துாய்மைப் பணிகளை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நேரில் ஆய்வு செய்தார். மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து, முறையாக தூய்மைப் பணியாளர்களிடம் கொடுத்து துாய்மைப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ