நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
வால்பாறை: வால்பாறை நகராட்சி கமிஷனராக ரகுராம் பொறுப்பேற்றார்.வால்பாறை நகராட்சி கமிஷனராக பணிபுரிந்த விநாயகம், ஆவடி மாநகராட்சி உதவி கமிஷனராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, அரக்கோணம் நகராட்சி கமிஷனர் ரகுராம், வால்பாறை நகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டார்.இவர், நேற்று முன்தினம் வால்பாறை நகராட்சியில் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய கமிஷனருக்கு, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார், தி.மு.க.,நகர செயலாளர் சுதாகர் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.